/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆபத்தை உணராமல் பயணம் போலீஸ் கண்காணிப்பு அவசியம்
/
ஆபத்தை உணராமல் பயணம் போலீஸ் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஜூன் 16, 2025 11:22 PM

பொன்னேரி, செங்கல்சூளை தொழிலாளர்கள், ஆபத்தை உணராமல் லாரியில் கூட்டமாக பயணிப்பதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
பொன்னேரி அடுத்த பெரும்பேடு, கம்மவார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு, 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர்.
இவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில், பொன்னேரி நகரப்பகுதிக்கு வந்து, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இதற்காக, இவர்கள் அனைவரும் ஒரே லாரியில் அழைத்து வரப்பட்டு, பொன்னேரி நகரப்பகுதியில் இறக்கிவிடப்படுகின்றனர். தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின், அதே லாரியில் மீண்டும் பணிபுரியும் இடத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதனால், இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் முன், போக்குவரத்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.