/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனைத்து ரக மாம்பழங்களும் விற்பனை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பயணியர்
/
அனைத்து ரக மாம்பழங்களும் விற்பனை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பயணியர்
அனைத்து ரக மாம்பழங்களும் விற்பனை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பயணியர்
அனைத்து ரக மாம்பழங்களும் விற்பனை ஆர்வமுடன் வாங்கி செல்லும் பயணியர்
ADDED : மே 19, 2025 11:58 PM

கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள ஆரம்பாக்கம், தோக்கமூர், பூவலை, கண்ணன்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன.
அப்பகுதிகளில் விளையும் ஜவ்வாரி மற்றும் பங்கனபள்ளி மாம்பழங்களுக்கு. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மவுசு அதிகம்.
ஆரம்பாக்கம் பகுதியின் மண் வளம், மாமரங்களுக்கு ஏதுவாக இருப்பதால், அங்கு ருமானியா, செந்துாரா, பங்கனபள்ளி, மல்கோவா, ஜவ்வாரி, இமாம்பசந்த், காலப்பாடி, ரசல் என. அனைத்து வகையான மாம்பழங்களும் விளைகின்றன.
தற்போது, ஆரம்பாக்கம் பகுதியில் மாம்பழ சீசன் களைகட்டுகிறது. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் ஆரம்பாக்கம் பகுதி அமைந்திருப்பதால், ஆரம்பாக்கம் - எளாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான மாம்பழ கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரகத்திற்கு ஏற்றபடி கிலோ, 80 - 120 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கண்களை கவரும் பல வகையான மாம்பழங்களை விற்பனைக்கு வைத்திருப்பதை காணும் நெடுஞ்சாலை பயணியர், தங்கள் வாகனங்களை நிறுத்தி, ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.