/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை இல்லாததால் திறந்தவெளியில் பயணியர்
/
நிழற்குடை இல்லாததால் திறந்தவெளியில் பயணியர்
ADDED : ஜன 17, 2025 02:35 AM

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு நகரில் இருந்து, திருத்தணி செல்லும் சாலையில், தீயணைப்பு நிலையம் எதிரே நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. புதிதாக திறக்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த பகுதி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. காலை முதல், மாலை வரை மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில், சோளிங்கர், பள்ளிப்பட்டு கூட்டுச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து இப்பகுதிவாசிகள் பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த கூட்டுச்சாலையில், நிழற்குடை இல்லாத நிலையில், திறந்தவெளியில் மழை, வெயிலில் காத்திருந்து பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் இந்த பகுதியில், அடிப்படை வசதிகளுடன் புதிய நிழற்குடை கட்டப்பட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.