/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயணியர் நிழற்குடை மழைநீர் தேங்கி அவலம்
/
பயணியர் நிழற்குடை மழைநீர் தேங்கி அவலம்
ADDED : செப் 25, 2024 07:03 AM

திருவள்ளூர் : திருமழிசை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை பகுதிவாசிகள் திருவள்ளூர், சென்னை செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் சரியான பராமரிப்பில்லாததால் மணலால் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழையால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையோரம் உள்ள பயணியர் நிழற்குடை பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியுளளது.
பேருந்து தள்ளி போய் நிற்பதால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடை பகுதியில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமழிசை அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.