/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேவராஞ்சேரியில் 'பார்' ஆக மாறிய பயணியர் நிழற்குடை
/
தேவராஞ்சேரியில் 'பார்' ஆக மாறிய பயணியர் நிழற்குடை
ADDED : பிப் 19, 2024 09:24 PM

பொன்னேரி:பொன்னேரி - பெரும்பேடு வழித்தடத்தில், தேவராஞ்சேரி கிராமத்திற்கான பேருந்து பயணியர் நிழற்குடை பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
தற்போது மதுபிரியர்களின் 'பார்' ஆக மாறி உள்ளது. மாலை நேரங்களில் மது அருந்துபவர்கள் அங்கு, அமர்ந்து குடித்துவிட்டு, காலிபாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.
மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களால் நிழற்குடை குப்பையாக கிடக்கிறது. மது குடிப்பவர்களின் செய்கைகளால் பயணியர் அங்கு நிற்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும், கட்டடம் ஆங்காங்கே விரிசல்களுடன் சேதமடைந்தும் உள்ளதால் நிழற்குடையை புதுப்பிக்க வேண்டும் எனவும், மாலை நேரங்களில் போலீசார் அப்பகுதியில் கண்காணிக்க வேண்டும் எனவும் கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

