/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை மறைக்கும் மரக்கிளை கண்களை பதம்பார்க்கும் அபாயம்
/
சாலையை மறைக்கும் மரக்கிளை கண்களை பதம்பார்க்கும் அபாயம்
சாலையை மறைக்கும் மரக்கிளை கண்களை பதம்பார்க்கும் அபாயம்
சாலையை மறைக்கும் மரக்கிளை கண்களை பதம்பார்க்கும் அபாயம்
ADDED : மே 10, 2025 03:00 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழு கண் பாலத்தில் இருந்து கும்புளி, ஏடூர், கொண்டமாநல்லுார் வழியாக கண்ணம்பாக்கம் வரையிலான சாலையை, மாநில நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.
நெடுஞ்சாலை துறையின், பிற மாவட்ட சாலைகளின் கீழ் உள்ள இச்சாலையை, மாநில நெடுஞ்சாலை துறையினர் முறையாக பராமரிப்பது இல்லை என, கிராமவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். கொண்டமாநல்லுார் கிராம எல்லையில், சாலையின் இருபுறமும் காப்பு காடுகள் உள்ளன.
இந்த காடுகளின் எல்லையில் படர்ந்துள்ள மூங்கில் மரங்கள், சாலையின் பெரும் பகுதியை அதன் கிளைகள் மறைத்துள்ளன. இதனால், இச்சாலையில் எதிரெதிரே வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரத்தில், இருசக்கர வாகன ஓட்டிகளை, மூங்கில் மரக்கிளைகள் பதம்பார்ப்பதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க, உடனடியாக இச்சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இடையூறாக உள்ள சாலையோர மூங்கில் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

