/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத நிழற்குடை மதுக்கூடமாக மாறியதால் அவதி
/
பராமரிப்பில்லாத நிழற்குடை மதுக்கூடமாக மாறியதால் அவதி
பராமரிப்பில்லாத நிழற்குடை மதுக்கூடமாக மாறியதால் அவதி
பராமரிப்பில்லாத நிழற்குடை மதுக்கூடமாக மாறியதால் அவதி
ADDED : ஏப் 18, 2025 02:53 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது ஏகாட்டூர் ஊராட்சி.
திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையோரம் கடம்பத்துார் காவல் நிலையம் அருகே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. கடம்பத்துார், பேரம்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மார்க்கமாக செல்வதற்கு, பயணியருக்கு இந்த நிழற்குடை பயன்படுகிறது. இந்த நிழற்குடை அமைந்துள்ள நெடுஞ்சாலை வழியே, கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டர் முதல் அரசு அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அலுவலக அலுவலர்கள் சென்று வருகின்றனர்.
இந்த நிழற்குடை முறையான பராமரிப்பு இல்லாததால் விளம்பரங்கள் ஓட்டும் இடமாகவும், 'குடி'மகன்களின் மதுக்கூடமாகவும் மாறியுள்ளது, இதனால், பகுதிவாசிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக குழந்தையுடன் மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள், நிழற்குடையில் ஒதுங்கி நிற்கக்கூட முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அருகிலேயே காவல் நிலையம் இருந்தும், நிழற்குடையில் அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, ஸ்ரீதேவிக்குப்பம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.