/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பேருந்துகள் திரும்பும் இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி

ADDED : ஏப் 06, 2025 10:59 PM
பூந்தமல்லி:பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பூந்தமல்லியின் பிரதான சாலையான 'டிரங்' சாலையோரம், ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள் உள்ளன. இவற்றில், வாகனங்கள் நிறுத்த வசதி இல்லை.
இதனால், கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இப்படி நிறுத்துவதால், பூந்தமல்லியில் தினமும் காலை, மாலை 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறி, டிரங் சாலையில் அரசு பேருந்துகள் திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு வாகனங்கள் மீது, பேருந்து மோதி விபத்து ஏற்படுவதும் நடக்கிறது.
அரசு பேருந்து திரும்பும் பகுதியில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்துவதை, போலீசார் தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.