/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி
/
கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அவதி
ADDED : பிப் 02, 2025 12:35 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம், புத்துார், நகரி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டையில் உள்ள இந்த பஜார் பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும்.
இங்கு குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியற்றில் இருந்து கழிவுநீர் வெளியேற கால்வாய் கட்டப்பட்டது. பராமரிப்பு இன்றி தற்போது கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைக்கு வருகிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.