/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு டிராக்டர் மீது லாரி மோதல்
/
கரும்பு டிராக்டர் மீது லாரி மோதல்
ADDED : பிப் 11, 2025 12:10 AM

ஆர்.கே.பேட்டை, ஆர்.கே.பேட்டையில் இருந்து, பள்ளிப்பட்டு நோக்கி, நேற்று இரவு கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர், ராஜாநகரம் அருகே சென்று கொண்டுஇருந்தது.
அப்போது பள்ளிப்பட்டில் இருந்து, ஆர்.கே.பேட்டை நோக்கி வந்த லாரி ஒன்று, கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மீது மோதியது.
இதில், லாரியின் முன்பக்கம் உருக்குலைந்தது. லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
ஆம்புலன்சில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், டிராக்டரை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தால், பள்ளிப்பட்டு மார்க்கத்தில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய லாரி மற்றும் டிராக்டர் ஓட்டுநர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.