/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மருத்துவ கழிவு கொட்ட எதிர்ப்பு காக்களூரில் லாரி சிறைபிடிப்பு
/
மருத்துவ கழிவு கொட்ட எதிர்ப்பு காக்களூரில் லாரி சிறைபிடிப்பு
மருத்துவ கழிவு கொட்ட எதிர்ப்பு காக்களூரில் லாரி சிறைபிடிப்பு
மருத்துவ கழிவு கொட்ட எதிர்ப்பு காக்களூரில் லாரி சிறைபிடிப்பு
ADDED : செப் 06, 2025 01:11 AM
காக்களூர்:காக்களூரில் மருத்துவ கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுதிமக்கள் லாரியை சிறைபிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை செங்குன்றம் பகுதியில், தனிநபர் ஒருவர் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவை சேகரித்து, மறுசுழற்சி செய்து விற்பனை செய்து வருகிறார். மீதமுள்ள கழிவை, திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆர்.கே.நகர் குடியிருப்பு பகுதியில், தனிநபர் ஒருவரின் இடத்தில் கொட்டி, அடிக்கடி தீ வைத்து வந்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிமக்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுடன் வந்த லாரியை, பகுதிமக்கள் சிறை பிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த திருவள்ளூர் தாசில்தார் பாலாஜி, பகுதிமக்களிடம் பேச்சு நடத்தி, லாரி ஓட்டுநரை எச்சரித்து திருப்பி அனுப்பினார்.
மேலும், 'குடியிருப்பு பகுதியில், ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவு அகற்றப்படும்' என, தாசில்தார் கூறியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.