/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திப்பட்டு சாலையில் வரிசை கட்டும் லாரிகள் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
அத்திப்பட்டு சாலையில் வரிசை கட்டும் லாரிகள் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
அத்திப்பட்டு சாலையில் வரிசை கட்டும் லாரிகள் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
அத்திப்பட்டு சாலையில் வரிசை கட்டும் லாரிகள் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : மார் 03, 2024 01:17 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணுார் காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகம் ஆகியவை உள்ளன. தினமும், நுாற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள், துறைமுகங்களுக்கு வந்து செல்கின்றன.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கன்டெய்னர் வாகனங்கள், மீஞ்சூர் அடுத்த வல்லுார் - அத்திப்பட்டு சாலை வழியாக பயணித்து, துறைமுகங்களுக்கு செல்கின்றன.
எண்ணுார் காமராஜர் துறைமுகத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், 110கோடி ரூபாயில் வல்லுார்- -- எண்ணுார் துறைமுகம் இடையே, 7 கி.மீ., தொலைவிற்கு சாலையை புதுப்பிக்கும் பணிகள் கடந்த, 2020ம் ஆண்டு துவங்கப்பட்டது.
பணிகள் முடிந்து, தற்போது பயன்பாட்டில் உள்ளது. இது, 18 மீ. அகலத்தில், நான்கு வழிச்சாலையாக கான்கிரீட் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, வல்லுார் - எண்ணுார் துறைமுகம் இடையேயான சாலை தரம் உயர்தப்பட்ட நிலையில், தற்போது, கன்டெய்னர் லாரிகள் சாலைகளை மறித்து நிற்கின்றன.
நீண்ட வரிசையில் நிற்கும் கனரக வாகனங்களால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நான்கு வழிச்சாலை, இருவழிச்சாலையாக மாறி உள்ளது.
வாகனங்கள் 'யு டர்ன்' போட்டு திரும்பும் இடங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கன்டெய்னர் லாரிகள் சாலையை மறித்து நிறுத்தப்படுவதால், தொடர் விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் நேரிடுகிறது.
கன்டெய்னர் லாரி டிரைவர்களை கேட்டால், 'தங்களுக்கு அனுமதி கடிதம் வந்தபின், துறைமுகத்திற்கு செல்வோம். அனுமதி கடிதத்தை பிரின்ட் எடுப்பதற்காக காத்திருக்கிறோம்' என தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தீர்க்க, 110 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ள நிலையில் தற்போது அதே நிலை தொடர்வதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
போக்குவரத்து போலீசார், இந்த சாலையில் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, அவசியம் இன்றி நிறுத்தி வைக்கப்படும் கன்டெய்னர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

