sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லட்சுமி நரசிம்மர் கோவிலில் அறங்காவலர் அறை...அகற்றம்:அனுமதியின்றி கட்டியதால் அறநிலையத்துறை அதிரடி

/

லட்சுமி நரசிம்மர் கோவிலில் அறங்காவலர் அறை...அகற்றம்:அனுமதியின்றி கட்டியதால் அறநிலையத்துறை அதிரடி

லட்சுமி நரசிம்மர் கோவிலில் அறங்காவலர் அறை...அகற்றம்:அனுமதியின்றி கட்டியதால் அறநிலையத்துறை அதிரடி

லட்சுமி நரசிம்மர் கோவிலில் அறங்காவலர் அறை...அகற்றம்:அனுமதியின்றி கட்டியதால் அறநிலையத்துறை அதிரடி


ADDED : ஜன 12, 2025 08:47 PM

Google News

ADDED : ஜன 12, 2025 08:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 2,000 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில், அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த அறங்காவலர் அறையை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அதிரடியாக அகற்றினர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, 2,000 ஆண்டுகள் பழமையான மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில்.

பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டு, பின் சிதிலம் அடைந்து, சோழர்கள் காலத்திலும், விஜயநகர அரசர்கள் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவிலின் கட்டட அமைப்பு, சோழர்களின் சிற்பக் கலைத் திறன் கொண்டு திகழ்கிறது. இந்த கோவில், 16-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பழமையும் விஜயநகரப் பேரரசுகால கட்டடக் கலையும் கொண்டுள்ளது.

விஜயநகர அரசர்கள் காலத்தில் இக்கோவில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு உள்ளது. கருவறையில் வீற்றிருக்கும் நரசிம்மர், பல்லவர் காலத்திய சிற்பம் என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இந்த கோவிலில், 2023ம் ஆண்டு, ஜூலை 5ம் தேதி பாலாலயம் நடைபெற்று கோவிலில் கும்பாபிஷேகத்திறக்கு திருப்பணிகள் துவங்கின. ஆனால், ஆறு மாதமாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தினங்களுக்க முன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர் குழு தலைவரும், தி.மு.க., கிளைச் செயலருமான மோகனசுந்தரம் என்பவர், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து கோவில் வளாகத்தில் அஷ்டலட்சுமி மண்டபத்தில் அறங்காவலர்களுக்காக அலுவலகம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மழைக்காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் இடமான அஷ்டலட்சுமி மண்டபத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கோவிலில் அன்னதான திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, தொல்லியல் துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, 'லட்சுமி நரசிமமர் கோவிலில் கட்டுமான பணிகளுக்கு எவ்வித அனுமதியும் கிடையாது' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.

எனவே, மாவட்ட நிர்வாகம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஒருவர் கூறியதாவது:

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், தற்போது தொல்லியல் துறை அனுமதியுடன் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன.

இதில், வர்ணம் பூசும் பணி மட்டும் தான் மேற்கொள்ள வேண்டும். கட்டுமான பணிகள் எதுவும் நடைபெற கூடாது. லட்சுமி நரசிம்மர் கோவிலில் அறங்காவலர் அறை கட்டும் பணி குறித்து புகார் வந்தது. இதையடுத்து, உடனடியாக ஆய்வு செய்து, நேற்று காலை கட்டப்பட்ட அறங்காவலர் அறை கட்டடம் அகற்றப்பட்டது.

இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து எவ்வித அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து கட்டுமான பணிகளை மேற்கொண்ட அறங்காவலர் மீது அரசு உத்தரவுக்குப்பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், வரும் காலங்களில் இதுபோன்று எவ்வித அனுமதியும் பெறாமல் பணிகள் நடந்தால் அறங்காவலரை பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் கூறினார்.






      Dinamalar
      Follow us