/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருநின்றவூரில் சுரங்கப்பாதை; பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்
/
திருநின்றவூரில் சுரங்கப்பாதை; பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்
திருநின்றவூரில் சுரங்கப்பாதை; பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்
திருநின்றவூரில் சுரங்கப்பாதை; பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்
ADDED : அக் 14, 2024 06:20 AM
திருநின்றவூர் : ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகள் உள்ளன.
இதில், வடக்கு பகுதியில் சி.டி.எச்.சாலை, தாசர்புரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதியில் 40,000க்கும் மேற்பட்ட வீடுகளும்,தெற்கு பகுதியில் கோமதிபுரம், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதியில் 20,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இவ்விரண்டு பகுதிகளை இணைக்கும் விதமாக, ஏற்கனவே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இருப்பினும் பொதுமக்கள், மேம்பாலம் வழியாக அரை கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல சிரமப்பட்டு, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடந்து, மேற்கூறிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
ரயில் நிலையத்தில், பொதுமக்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்வதை தவிர்க்கும் பொருட்டு, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், 48 படிகள் கொண்ட ரயில்வே நடைமேம்பாலம் மற்றும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மின் துாக்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மின்துாக்கியை ரயில் பயணியர் மட்டுமின்றி, அப்பகுதிவாசிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, திருநின்றவூர் ரயில் நிலையத்தில், முதல் மற்றும் இரண்டாவது நடைமேடை இடையே, அடிக்கடி காலி ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.
பொதுமக்கள், ஆபத்தை உணராமல் அந்த ரயில்களுக்கு இடையே குனிந்து சென்று வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ரயில்வே நடை மேடையை இணைக்கும் விதமாக, சுரங்கப்பாதை அமைக்க, 30 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் ரயில் பயணியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், இந்த கோரிக்கை கிடப்பில் உள்ளது. எனவே, சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.