/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலர் எரிப்பு மர்ம நபருக்கு வலை
/
டூ - வீலர் எரிப்பு மர்ம நபருக்கு வலை
ADDED : பிப் 15, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை ஊராட்சி, குமரன் நகரைச் சேர்ந்தவர் முருகன், 40. இவர், நேற்று முன்தினம் இரவு தன், 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தை வழக்கம்போல வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்றார்.
இதையடுத்து, நள்ளிரவு 1:00 மணியளவில் மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தி விட்டு சென்றனர். இதில், இருசக்கர வாகனம் முழுதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

