ADDED : நவ 29, 2024 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், தாணிப்பூண்டி சந்திப்பு அருகே போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து, 5 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
அதன் ஓட்டுனர் மற்றும் கிளீனரான தாமரைப்பாக்கம் சூர்யா, 26, சீனிவாசன், 53, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.