ADDED : ஜன 18, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:மாதர்பாக்கம் அருகே, போந்தவாக்கம் - பல்லவாடா சாலையில், பாதிரிவேடு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த, பதிவு எண் இல்லாத டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம், வரதய்யாபாளையம் பகுதியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் மிர்ஜான், 35, உடன் வந்த, ஆந்திர மாநிலம், காளஹஸ்தி பகுதியைச் சேர்ந்த பிரசாத், 38, ஆகிய இருவரை பாதிரிவேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.