/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
/
வாலிபரை தாக்கி பணம் பறித்த இருவர் கைது
ADDED : மார் 18, 2025 12:53 AM
திருவள்ளூர்; திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிஷ் சர்மா, 26. இவர், கடந்த 14ம் தேதி இரவு 11:00 மணிக்கு, தனதுநண்பர் பரத்சிங் என்பவருடன் காக்களூர் ஏரிக் கரைக்கு சென்றார்.
அப்போது, அங்குள்ள கன்னியம்மன் கோவில் அருகே, இருவர் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் மணிஷ் சர்மா, 'ஏன் இங்கு சரக்கு அடிக்கிறீர்கள்' எனக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும், மணிஷ் சர்மாவை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, 2,500 ரூபாயை பறித்து சென்றனர். இதில் படுகாயமடைந்தவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
இதுகுறித்து, மணிஷ்சர்மா அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், திருநின்றவூர் எபினேசர், 39 மற்றும் வில்லிவாக்கம் கார்த்திக், 32, என தெரியவந்தது. நேற்று முன் தினம் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.