/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரத்தில் நாயை அடித்து கொன்றதாக இருவர் கைது
/
சோழவரத்தில் நாயை அடித்து கொன்றதாக இருவர் கைது
ADDED : அக் 24, 2025 10:34 PM
சோழவரம்: வாகனங்கள் மீது ஏறி சேட்டையில் ஈடுபட்ட தெரு நாயை அடித்து கொன்றதாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் மெட்டில்டா, 40. இவர், சோழவரம் அடுத்த நல்லுார் பகுதியில், தெருநாய்களுக்கான காப்பகம் வைத்துள்ளார். இங்கு, 60க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பராமரித்து வருகிறார்.
நேற்று, காப்பகத்தில் இருந்து வெளியில் வந்த தெருநாய் ஒன்று, அங்குள்ள ஆட்டோ மற்றும் பைக்கின் மீது ஏறி அமர்ந்து சேட்டையில் ஈடுபட்டது.
இதை கண்ட வாகன உரிமையாளர்கள், நாயை அங்கிருந்து விரட்டினர். மீண்டும் வாகனங்களில் ஏறி சேட்டையை தொடர்ந்ததால், கற்களை கொண்டு எறிந்தனர். இதில் காயமடைந்த நாய், அதே இடத்தில் உயிரிழந்தது.
இதுகுறித்து மெட்டில்டா, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார், நல்லுார் பகுதியைச் சேர்ந்த, சுதர்சிங், 35, அம்பத்துாரைச் சேர்ந்த, ஜெயசீலன், 33, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

