/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
/
சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
சோழவரத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
UPDATED : மார் 30, 2025 02:22 AM
ADDED : மார் 29, 2025 10:30 PM
சோழவரம்:சோழவரம் அடுத்த ஆத்துார் வி.ஜி.பி., மேடு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ், 22.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, 'பி' பிரிவு சரித்திர பதிவேடு
ரவுடி. இவர், கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி, ஐந்து பேர் கும்பலால்
வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய ஆத்துாரை சேர்ந்த
குமார், 30, கார்த்திக், 26, மணிகண்டன், 34, ஐயப்பன், 30, மற்றும் சோழவரம்
அடுத்த பன்னீர்வாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ், 18, ஆகியோரை, சோழவரம் போலீசார்
கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சென்னை
ஆதம்பாக்கத்தில், கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக, இரு
நாட்களுக்கு முன் பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம்
நடத்திய விசாரணையில், சோழவரம் அடுத்த ஆத்துார் வி.ஜி.பி., மேடு பகுதியைச்
சேர்ந்த வினித் என்பவர் கொடுத்ததாக தெரிவித்தார்.
வினித் என்பவர்,
கொலை செய்யப்பட்ட தனுஷின் சகோதரர். இதையடுத்து, ஆதம்பாக்கம் போலீசார்
வினித்தை தேடிவந்த நிலையில், ஆந்திராவிற்கு தப்பியது தெரிந்தது. நேற்று
முன்தினம் ஆந்திராவில் பதுங்கியிருந்த வினித், 24, மற்றும் அவரது கூட்டாளி
முருகன், 23, ஆகியோரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
வினித்தின்
வீட்டில் சோதனை செய்தபோது, எட்டு நாட்டு வெடிகுண்டுகளும், முருகன்
வீட்டில் ஒரு நாட்டு வெடிகுண்டு இருந்தது தெரிந்தது. இவற்றை போலீசார்
கைப்பற்றி உள்ளனர்.
கடந்தாண்டு சகோதரனை கொலை செய்த கும்பலை
பழிதீர்ப்பதற்காக வினித், நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் பதுக்கி
வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சோழவரம் மற்றும் ஆதம்பாக்கம்
போலீசார் விசாரிக்கின்றனர்.

