ADDED : செப் 25, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் : மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளிவாக்கம், இலுப்பூர், பாக்கபேட்டை, ஆகிய பகுதிகளில் மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் கர்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது கொப்பூர் பகுதியில் மாந்தோப்பில் சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார், 23, சத்தியராஜ், 23 என்பதும் அவர்கள் 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. கஞ்சாவின் மதிப்பு 3 ஆயிரம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.