ADDED : ஏப் 26, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில்நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவள்ளூர் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரயில் நிலையம் அருகே ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரில் இருவர் தப்பியோடினர். இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 26, மற்றும் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த சூர்யா, 21, என தெரிந்தது.
இவர்களிடமிருந்து 4.5 கிலோ கஞ்சா மற்றும் இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

