ADDED : நவ 02, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: ஆந்திர மாநில மதுபாட்டில்கள், தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., கந்தனுக்கு தகவல் கிடைத்தது.
திருத்தணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ஆர்.கே.பேட்டை அடுத்த தேவலாம்பாபுரம் சோதனைச் சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்ததில், 100 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் சோளிங்கர் அடுத்த சோமசுந்தரம் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி, 50, பிரவீன்குமார், 28 என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

