ADDED : அக் 14, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி : ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் தமிழக- - ஆந்திரா எல்லையான பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வாலிபர்கள் வைத்திருந்த பையில், 500 கிராம் கஞ்சா இருந்தது பறிமுதல் செய்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 23, விஜய், 22 ஆகிய இருவரை கைது செய்தனர்.