/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேக்கரியில் 'ஓசி' கேட்டு தகராறு வாலிபரை வெட்டிய இருவர் கைது
/
பேக்கரியில் 'ஓசி' கேட்டு தகராறு வாலிபரை வெட்டிய இருவர் கைது
பேக்கரியில் 'ஓசி' கேட்டு தகராறு வாலிபரை வெட்டிய இருவர் கைது
பேக்கரியில் 'ஓசி' கேட்டு தகராறு வாலிபரை வெட்டிய இருவர் கைது
ADDED : ஆக 11, 2025 11:04 PM

வேப்பம்பட்டு, பேக்கரியில் 'ஓசி' கேட்டு தகராறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே நந்தகுமார், 24 என்பவர் பேக்கரி மற்றும் இனிப்புக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 9ம் தேதி இரவு 10:30 மணியளவில், இவரது கடைக்கு குடிபோதையில் வந்த இருவர் 'ஓசி'யில் மிச்சர், பால்கோவா கேட்டனர். நந்தகுமார் ஓசியில் தர முடியாது என, மறுத்துள்ளார்
இதனால் ஆத்திரமடைந்த குடிபோதை நபர்கள், கடையில் இருந்த பொருட்களை துாக்கி தரையில் வீசியதுடன், இங்கு கடை நடத்தினால் கொன்று விடுவேன் என மிரட்டினர்.
இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் தன் நண்பரான மற்றொரு நந்தகுமார், 32 என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த நந்தகுமார், இருவரிடமும் தட்டிக் கேட்டுள்ளார். இதில் போதை நபரில் ஒருவர், தான் வைத்திருந்த கத்தியால் நந்தகுமாரின் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த நந்தகுமார், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் நந்தகுமார் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த செவ்வாய்பேட்டை போலீசார், கடையில் இருந்த 'சிசிடிவி' பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குடிபோதை நபர்கள் இருவரும், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த அருண்குமார், 29, கோபால், 25,என தெரிந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.