/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் ஊழியரை கத்தியால் வெட்டிய இருவர் கைது
/
தனியார் ஊழியரை கத்தியால் வெட்டிய இருவர் கைது
ADDED : ஜூன் 28, 2025 10:22 PM
திருத்தணி:முன்விரோதம் காரணமாக, தனியார் ஊழியரை கத்தியால் வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 35; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், தாழவேடு காலனியைச் சேர்ந்த ஷியாம்சுந்தர், 24, அபி என்கிற அபிஷேக், 20, உட்பட நான்கு பேருக்கும், பேருந்து படியில் நின்று பயணம் செய்வது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் மற்றும் அடிதடி நடந்து வந்தது.
கடந்த 26ம் தேதி அசோக்குமார், இருசக்கர வாகனத்தில் தாழவேடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அசோக்குமாரை வழிமறித்து, கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று ஷியாம்சுந்தர், அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.