ADDED : அக் 01, 2024 07:30 PM
அ நிறம் | அளவு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் ஆர்.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன், 55. இவர், தன் தரிசு நிலத்தில் சொட்டு நீர் பாசனத்திற்கு குழாய் அமைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சொட்டுநீர் பாசன குழாயை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு 30,000 ரூபாய். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, வி.சி.ஆர்.கண்டிகையைச் சேர்ந்த சிவா, 30, ரமேஷ், 45, ஆகியோரை கைது செய்தனர்.
