/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில் அர்ச்சகர் வீட்டில் திருடிய இருவர் சிக்கினர்
/
கோவில் அர்ச்சகர் வீட்டில் திருடிய இருவர் சிக்கினர்
கோவில் அர்ச்சகர் வீட்டில் திருடிய இருவர் சிக்கினர்
கோவில் அர்ச்சகர் வீட்டில் திருடிய இருவர் சிக்கினர்
ADDED : ஆக 24, 2025 01:56 AM
திருவாலங்காடு:பாகசாலையில் கோவில் அர்ச்சகர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய இருவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை கிராமம் மணியக்கார தெருவில் வசிப்பவர் மணி, 45. இவர், உளுந்தையில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவர், கடந்த 20ம் தேதி மனைவி, குழந்தையுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மாலை 6:00 மணிக்கு வீடு திரும்பினார்.
வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது, உள் கதவு பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 30,000 ரூபாய், வெள்ளி குத்துவிளக்கு, தங்க மோதிரம், பிரேஸ்லெட் என, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து மணி அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரித்து வந்தனர். திருட்டில் ஈடுபட்ட திருவாலங்காடு ஒன்றியம், பொன்னாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எழில், 30 மற்றும் கிருபாகரன், 21, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.