/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டீத்துாள் திருடிய இருவர் கைது
/
டீத்துாள் திருடிய இருவர் கைது
ADDED : ஜன 05, 2026 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:டீத்துாள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம் அடுத்த, பனப்பாக்கம் கிராமத்தில் டீத்துாள் குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இங்கிருந்து லாரியில், 1,132 பெட்டிகளில் டீத்துாள் ஏற்றுவதற்கு பதில் மூன்று பெட்டிகள் அதிகமாக ஏற்றப்பட்டன.
குடோன் உரிமையாளர் சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த கணேஷ், லாரி ஓட்டுனர் அன்பழகனிடம் விசாரித்தார். குடோன் மேனேஜர் ேஹமநாதன் கூறியதால் அதிக பெட்டிகளை ஏற்றியதாக கூறினார்.
இதுகுறித்து கணேஷ் கொடுத்த, புகாரின்படி பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ேஹமநாதன், 32 அன்பழகன், 45 ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்,

