/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் மதுக்கூட ஊழியர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு
/
மீஞ்சூரில் மதுக்கூட ஊழியர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு
மீஞ்சூரில் மதுக்கூட ஊழியர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு
மீஞ்சூரில் மதுக்கூட ஊழியர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு
ADDED : மார் 19, 2024 08:43 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் - காட்டூர் சாலையில் உள்ள கொக்குமேடு கிராமத்தில், டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. இங்குள்ள மதுக்கூடத்தில் மீஞ்சூர் ஜெகஜீவன்ராம் தெருவைச் சேர்ந்த ஜெயின், 36, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் மதுக்கூடத்திற்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியர்களிடம் மதுபானம் கேட்டு, காலி மதுபாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதுடன், தடுக்க சென்ற ஊழியர் ஜெயினை, கை மற்றும் தோள்பட்டையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
அதேபோல், மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்திலும், நேற்று முன்தினம் இரவு ஐந்து பேர் கொண்ட கும்பல், அங்குள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் ரகளையில் ஈடுபட்டது.
அங்கு பணிபுரியும், ராமநாதபுரம் மாவட்டம், பாகூரைச் சேர்ந்த பிரேம்நாத், 21, என்பவரை, மதுபாட்டிலால் தலையில் அடித்தும், கைகளை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியது.
இந்த இருவேறு சம்பவங்களிலும் காயமடைந்த ஜெயின் மற்றும் பிரேம்நாத் ஆகியோர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், இருவேறு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலா என, அங்குள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

