ADDED : அக் 20, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
போளிவாக்கம்: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, 45. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜம்புலிங்கம் என்பவருக்கும், நிலப்பிரச்னை தகராறு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஜம்புலிங்கம், உறவினர் சுப்பரமணி ஆகிய இருவரும், நிலப்பிரச்னை தொடர்பாக லட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, லட்சுமி கொடுத்த புகாரின்படி, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
