/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு குழந்தைகள் தத்து மையத்தில் ஒப்படைப்பு
/
இரு குழந்தைகள் தத்து மையத்தில் ஒப்படைப்பு
ADDED : நவ 28, 2025 03:29 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், கைவிடப்பட்ட இரண்டு பச்சிளம் குழந்தைகள், தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ரெட்டித்தோப்பு பகுதியில், கடந்த, அக்., 20ம் தேதி ஆதரவற்ற நிலையில் இருந்த, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, 'அகேப் லைப் லைன் சில்ரன்ஸ் ட்ரஸ்ட்' சிறப்பு தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதே போல், கடந்த அக்., 23ம் தேதி, திருச்சியைச் சேர்ந்த ராணி என்பவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், குழந்தை பிறந்ததும், குழந்தையை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்.
அந்த குழந்தையும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், விழுப்புரம் ஏ.ஆர்.எம்., சிறப்பு தத்து மையத்தில், ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்விரண்டு குழந்தைகளுக்கு உரியோர் யாரேனும் இருப்பின், தங்கள் ஆட்சேபனையை, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு ஆட்சேபனை வராவிட்டால், குழந்தையை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

