/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் இரு தினங்கள் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்
/
திருவள்ளூரில் இரு தினங்கள் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்
திருவள்ளூரில் இரு தினங்கள் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்
திருவள்ளூரில் இரு தினங்கள் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்
ADDED : நவ 21, 2025 03:37 AM
திருவள்ளூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், படிவம் பூர்த்தி செய்வதற்காக, நாளை முதல் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தை வீடு வீடாகச் சென்று வழங்கி, பூர்த்தி செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும், நாளை 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரு தினங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அவரவர் ஓட்டுச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் செயல்பட உள்ளன.
இதில் கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்வதில், சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் இவ்வுதவி மையங்களை தொடர்பு கொண்டு கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

