தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஓட்டுநரை வழிமறித்து தாக்கிய போதை ஆசாமிகள் இருவர் கைது

ஓட்டுநரை வழிமறித்து தாக்கிய போதை ஆசாமிகள் இருவர் கைது

ஓட்டுநரை வழிமறித்து தாக்கிய போதை ஆசாமிகள் இருவர் கைது


ADDED : நவ 17, 2026 07:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 07:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.பேட்டை: மாமியார் வீட்டிற்கு வந்து மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஓட்டுநரை தாக்கிய போதை நபர்கள் இருவரை, இன்று (நவ.,17) போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு அடுத்த சாமந்தவாடாவை சேர்ந்தவர் அருணாச்சலம், 28. சரக்கு வாகன ஓட்டுநரான இவர், இன்று ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்துாரில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார்.

மீண்டும், கரிக்கல் கூட்டு சாலை வழியாக, சாமந்தவாடா திரும்பிக்கொண்டிருந்தார். வீராணத்துார் யாதவர் தெரு அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு மது போதையில் இருந்த மூன்று பேர், அருணாச்சலத்தை வழிமறித்து தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அருணாச்சலத்தின் மாமியார் பொற்கொடி, 45, அங்கே வந்துள்ளார். அருணாச்சலத்தை தாக்கியவர்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போதை ஆசாமிகள், பொற்கொடியையும் தாக்கியுள்ளனர்.

போதை நபர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்த அருணாச்சலத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

பின், அங்கிருந்து, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்படி விசாரித்த ஆர்.கே.பேட்டை போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட வீராணத்துார் காலனியை சேர்ந்த ஆகாஷ், 24, சஞ்சய், 28, ஆகியோரை கைது செய்தனர். மேலும், அதே கிராமத்தை சேர்ந்த விஜய், 23, என்பவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us