ADDED : நவ 17, 2026 07:57 PM
திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 22. இவர், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.எஸ்.சி., நர்சிங் படித்து வருகிறார்.
அதே கல்லுாரியின் விடுதியில் தங்கியுள்ள அவர், கடந்த இரு நாட்களுக்கு முன் பெற்றோரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘இன்றுடன் தேர்வு முடிகிறது; வீட்டிற்கு வருகிறேன்’ என தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், அன்று இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால், சுப்புலட்சுமியின் பெற்றோர் கல்லுாரிக்கு நேரில் வந்து விசாரித்தனர்.
அப்போது, ‘வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, சுப்புலட்சுமி சென்றுவிட்டார்’ என, விடுதி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, பல இடங்களில் தேடியும் சுப்புலட்சுமி கிடைக்காததால், அவரின் தாய் மகேஸ்வரி, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
