ADDED : அக் 20, 2026 05:05 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: சேலை பகுதியில், பணம் வைத்து சூதாடிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த சேலை பகுதியில், சூதாட்டம் நடப்பதாக, திருவள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, அப்பகுதியில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை கண்டதும், பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த இருவர் தப்பியோட முயன்றனர்.
அவர்களை மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரித்ததில், புங்கத்துார் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 42, மணவாள நகர் பகுதியை சேர்ந்த குமார், 65, என்பது தெரிந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, சீட்டு கட்டுகள், 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
