ADDED : டிச 27, 2024 08:31 PM
கடம்பத்துார்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம். இங்கிருந்து செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு இடையே நேற்று முன்தினம் காலை 8:45 மணியளவில் பெண் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த பெண்ணுக்கு சுமார் 65 வயதிருக்கும் என்றும், புறநகர் மின்சார ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் விரைவு ரயில் செல்லும் வழித்தடத்தில் திருவாலங்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் ஒருவர் உடல் சிதறி பலியாகி கிடந்ததாக அரக்கோணம் ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இறந்து கிடந்த நபருக்கு சுமார் 45 வயதிருக்கும், என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.