/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இரு தரைப்பாலங்கள் மூழ்கின
/
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இரு தரைப்பாலங்கள் மூழ்கின
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இரு தரைப்பாலங்கள் மூழ்கின
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இரு தரைப்பாலங்கள் மூழ்கின
ADDED : அக் 19, 2024 12:50 AM

ஊத்துக்கோட்டை:வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக தமிழகத்தில் தொடர் மழை பெய்து வந்தது. புயல் கரையை கடந்த நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக கரையோர கிராமங்களில் தாழ்வான இடங்களில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், புதுப்பாளையம், மங்களம் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளப்பெருக்கால் மூழ்கின. இதனால் புதுப்பாளையம், மங்களம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாலத்தின் மீது செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.