/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது
/
வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது
ADDED : ஆக 03, 2025 10:59 PM
கும்மிடிப்பூண்டி, ஆக. 4-
வாலிபர் கொலை வழக்கில், ஏழு பேர் கைதான நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அரும்பாக்கம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முருகன், 26. அப்பகுதியில், ஜூலை 31ல் உறவினர் இல்ல காதணி விழாவிற்கு சென்றார்.
அப்போது, முருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும், குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, 10 பேர் கொண்ட கும்பலால், முருகன் வெட்டி கொல்லப்பட்டார்.
ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, ஆரம்பாக்கத்தை சேர்ந்த சங்கர், 23, கார்த்திக், 21, சாரதி, 20, பெரிய ஓபுளாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 27, ஆந்திர மாநிலம், பெரியவேடு கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 19, ராஜேஷ், 20, புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் 35, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி கரிமேடு லோகேஷ், 23, ஆரம்பாக்கம் செல்லியம்மன் நகர் வெங்கடேஷ், 25, ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுவரை ஒன்பது பேர் கைதான நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

