/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் இரண்டு பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
/
திருவள்ளூரில் இரண்டு பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
திருவள்ளூரில் இரண்டு பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
திருவள்ளூரில் இரண்டு பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஜன 03, 2024 09:55 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில், புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகளில், பொது ஒதுக்கீட்டு இடங்களான பூங்கா, சிறுவர் விளையாடும் இடம் மற்றும் திறந்தவெளி பகுதி ஆகியவை, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ஜெயா நகர், வி.எம்.நகர், ராஜாஜிபுரம், என்.ஜி.ஓ., காலனி, எம்.ஜி.எம்., நகர், ஜவஹர் நகர், விக்னேஷ்வரா நகர், ஐ.சி.எம்.ஆர்., பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 120 இடங்களில், பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன.
தற்போது, என்.ஜி.ஜி.ஓ., காலனி, புங்கத்துார் லட்சுமிபுரம் மற்றும் பத்மாவதி நகர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே பூங்கா அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், 27வது வார்டு வரதராஜபுரத்தில், 32 லட்சம் ரூபாய், 18வது வார்டு வைஷ்ணவி நகரில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டு பணி நிறைவு பெற்றது.
இதையடுத்து, நேற்று நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் சுரேந்திர ஷா முன்னிலையில், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
இந்த பூங்காக்கள் சுற்றுச்சுவர், நடைபாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பாதுகாவலர் அறை வசதியுடன் உள்ளது.
மேலும், பூங்கா சுவர்களில் அழகிய ஓவியம் வரையப்பட்டு உள்ளன. இதன் வாயிலாக, திருவள்ளூர் நகராட்சியில், பூங்காக்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.