ADDED : ஏப் 28, 2025 01:58 AM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் சிலர் வீடுகளில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று நொச்சலி காலனி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பூங்கொடி, 48 என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தது. போலீசார் பூங்கொடியை கைது செய்து, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தேர்வாய் கிராமத்தில், அரசு மதுக்கடை இயங்காத நேரத்தில், கூடுதல் விலைக்கு பிளாக்கில், மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தேர்வாய் கிராமத்தை சேர்ந்த குப்பன், 60, என்பவர் வீட்டின் அருகே மது விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம், 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.