/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நேருக்கு நேர் மோதிய கார் - பைக் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு
/
நேருக்கு நேர் மோதிய கார் - பைக் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு
நேருக்கு நேர் மோதிய கார் - பைக் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு
நேருக்கு நேர் மோதிய கார் - பைக் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு
ADDED : ஜன 23, 2024 05:21 AM
திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 40; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு, திருநின்றவூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார்.
நிகழ்ச்சி முடிந்து, பக்கத்து வீட்டில் வசிக்கும் மஞ்சுளா, 55, ஹரிஷ், 12, மற்றும் அஸ்விகா, 3, ஆகியோருடன் 'ஹீரோ பேஷன்' இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திருநின்றவூர் ரயில்வே மேம்பால வளைவில் திரும்பும்போது, எதிரே வந்த 'ஹோண்டா வெர்னா' கார் மோதியதில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மஞ்சுளா, 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
லேசான காயங்களுடன் உயிர் தப்பிய ஹரிஷ் மற்றும் அஸ்விகா, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விசாரிக்கும், ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், தப்பி ஓடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.மேம்பால சுற்றுச்சுவரின் தடுப்பு உயரம் குறைவாக இருப்பதால், மஞ்சுளா மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தது குறிப்பிடத்தக்கது.

