/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு சவரன் நகை திருட்டு
/
திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு சவரன் நகை திருட்டு
திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு சவரன் நகை திருட்டு
திருத்தணி முருகன் கோவிலில் இரண்டு சவரன் நகை திருட்டு
ADDED : ஜூலை 21, 2025 11:58 PM
திருத்தணி,திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நேற்று முன்தினம் விடுமுறை மற்றும் ஆடி மாதம் முதல் கிருத்திகை தினம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முருகன் கோவிலில் குவிந்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த நாகமணி, 40, என்ற பெண், மூலவரை தரிசனம் செய்ய பொதுவழியில் சென்றார். அப்போது, நாகமணி கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் செயினை மர்ம நபர் திருடி சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர்.