/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி நகரில் தொடரும் டூ- -- வீலர்கள் திருட்டு
/
திருத்தணி நகரில் தொடரும் டூ- -- வீலர்கள் திருட்டு
ADDED : ஜூலை 31, 2025 12:46 AM
திருத்தணி:திருத்தணி நகரத்தில் இரு சக்கர வாகனங்கள் திருடுவது அதிகரித்து வருவதால் வாகன உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருத்தணி நகரில் முருகன் கோவில், அரசின் அனைத்து துறை அலுவலகங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்பட ரயில் நிலையம் உள்ளதால் தினமும், 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களில், இருந்து பெரும்பாலான மக்கள் பல்வேறு பணிகளுக்காக இரு சக்கர வாகனங்களில் திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திருத்தணி நகரில், கடைகள் மற்றும் வீடுகள் முன் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்வது அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் இரு சக்கர வாகனங்கள் திருடிச் செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர்.
வாகன உரிமையாளர்கள் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும் புகார்கள் மீது வழக்கு பதியவும் போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வது குறித்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை வைத்து புகார் கொடுத்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை.
எஸ்.பி., விரைந்து நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.