ADDED : ஜன 18, 2025 11:00 PM
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்டது பாத்தகுப்பம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கா, 49; இரண்டு நாட்களுக்கு முன் இரவு, இவரது வீட்டு வாசலில் அவரது, 'ஹீரோ ' இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
மறுநாள் காலையில் வந்து பாரத்த் போது அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டார். இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், ரங்காவில் உறவினர் ஒருவர், திருடு போன இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர், அதே பகுதியில் ஓட்டி சென்றது குறித்து ரங்காவுக்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார், கோணசமுத்திரம்காலனியைச் சேர்ந்த சுனில்குமார், 19, என்பவரிடம் இருந்து, ரங்காவின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றினர்.
பொதட்டூர்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து, சுனில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

