/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமூகவிரோத செயல்களுக்கு டூ-- வீலர்கள் தொடர் திருட்டு
/
சமூகவிரோத செயல்களுக்கு டூ-- வீலர்கள் தொடர் திருட்டு
சமூகவிரோத செயல்களுக்கு டூ-- வீலர்கள் தொடர் திருட்டு
சமூகவிரோத செயல்களுக்கு டூ-- வீலர்கள் தொடர் திருட்டு
ADDED : அக் 29, 2024 08:18 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, அரிச்சந்திராபுரம், திருவாலங்காடு பகுதிகளில், இருசக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது.
இங்கு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், மப்பேடு மற்றும் திருவள்ளூர் நகரை சுற்றியுள்ள தொழிற்சாலையில் பணிபுரிய, ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்கின்றனர். பெரும்பாலான வீடுகளில், இருசக்கர வாகனங்கள் உள்ளன.
இங்குள்ள குடியிருப்புகளில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் சின்னம்மாபேட்டையில் மூன்று, அரிசந்திராபுரத்தில் மூன்று என, ஆறு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு உள்ளன.
பாதிக்கப்பட்டோர் இது குறித்து, திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தால், வாங்குவதில்லை என்றும், முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல நாட்கள் காவல் நிலையம் அலைந்த பின்னரே, வழக்கு பதிவு செய்யப்படுகிறது. திருடப்பட்ட வாகனங்களை சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்கு பயன்படுத்தி, வாகனம் பிடிபட்டால் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர்கள் பீதியில் உள்ளனர்.
எனவே, 'இருசக்கர வாகனங்கள் திருட்டை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி நடக்கும் திருட்டு சம்பவங்களுக்கு, முறையாக வழக்கு பதிவு செய்து கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.