/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் அரிசி கடத்திய இரு பெண்கள் கைது
/
ரேஷன் அரிசி கடத்திய இரு பெண்கள் கைது
ADDED : செப் 02, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை, இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பகுதியில், ஆர்.கே.பேட்டை போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக ஆந்திர மாநிலம், சித்துார் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
வாகனத்தில், 240 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரிந்தது.
வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஆந்திர மாநிலம், எஸ்.ஆர்.கண்டிகையை சேர்ந்த மீனா, 30, வேலுார் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த விசாலாட்சி, 36, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.