/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பணி ஒப்பந்த லாரி மோதி இரு வாலிபர்கள் உயிரிழப்பு
/
அரசு பணி ஒப்பந்த லாரி மோதி இரு வாலிபர்கள் உயிரிழப்பு
அரசு பணி ஒப்பந்த லாரி மோதி இரு வாலிபர்கள் உயிரிழப்பு
அரசு பணி ஒப்பந்த லாரி மோதி இரு வாலிபர்கள் உயிரிழப்பு
ADDED : பிப் 22, 2024 11:00 PM

செய்யூர், செய்யூர் அருகே ஓணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் ராமமூர்த்தி, 24. இவரது உறவினர் மதன் கவுதம், 26.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சென்னையில் இருந்து வரும் உறவினரை அழைத்துவர, ராமமூர்த்தி தன் 'ஹோண்டா சைன்' இருசக்கர வாகனத்தில், உறவினர் மதன் கவுதமுடன், எல்லையம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது, முதலியார்குப்பம், வாஞ்சிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்றது.
இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே ராமமூர்த்தி, மதன் கவுதம் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல அறிந்து விரைந்து சென்ற செய்யூர் போலீசார், இருவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார், லாரியை ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி என்பது தெரிய வந்துள்ளது.