/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவு விரைந்து அகற்ற உதயநிதி அறிவுறுத்தல்
/
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவு விரைந்து அகற்ற உதயநிதி அறிவுறுத்தல்
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவு விரைந்து அகற்ற உதயநிதி அறிவுறுத்தல்
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவு விரைந்து அகற்ற உதயநிதி அறிவுறுத்தல்
ADDED : ஆக 31, 2025 03:13 AM

மீஞ்சூர்:வடசென்னை அனல்மின் நிலையம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் தேங்கிய சாம்பல் கழிவுகள் அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ள, துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், வடசென்னை அனல்மின் நிலையம் நிலை ஒன்று மற்றும் இரண்டில், 1,830 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. மூன்றாவது நிலையிலும், சோதனை உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அனல்மின் நிலையங்களுக்கு அருகே கொசஸ்தலை ஆறு பயணிக்கிறது. மின் உற்பத்திக்காக நிலக்கரி எரிக்கப்பட்டு, அதிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் தேங்கியது. இதனால், மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, 28 கோடி ரூபாய் செலவில், ஆற்றில் உள்ள சாம்பல் கழிவுகள், 'டிரஜ்ஜர்' இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறது.
நேற்று, துணை முதல்வர் உதயநிதி, அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், இப்பணிகள் குறித்த வரைபடங்களை காண்பித்தார்.
“வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொசஸ்தலை ஆற்றில் மழைநீர் தடையின்றி எளிதாக செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் துார்வாரும் பணிகளை, விரைந்து மேற்கொள்ள வேண்டும்,” என, துணை முதல்வர் உதயநிதி, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

