/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ADDED : ஏப் 11, 2025 02:24 AM

பொன்னேரி:பொன்னேரி, அடுத்த காட்டாவூர் கிராமத்தில், 200க்கும் அதிகமான குடியிருப்புகளில், 5,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
பொன்னேரி - அரசூர் நெடுஞ்சாலையில் இருந்து, காட்டாவூர் கிராமத்திற்கு செல்லும், ஒரு கி.மீ., தொலைவிற்கான ஒன்றிய சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டும், சரளை கற்கள் பெயர்ந்தும் கிடக்கின்றன. கிராமவாசிகள் பெரும் சிரமத்துடனும், தடுமாற்றத்திலும் பயணிக்கின்றனர்.
கடந்த, 12 ஆண்டுகளாக சாலை இதே நிலையில் இருப்பதால், அதை சீரமைத்து தரக்கோரி கிராமவாசிகள், மீஞ்சூர் ஒன்றியம் நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் நடவடிக்கை இல்லை.
சாலை சேதம் அடைந்து இருப்பதால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாவதாகவும், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட வரதயங்குவதாகவும் கிராமவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, காட்டாவூர் கிராம சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.